நுரையீரலை சுத்தம் செய்வது

72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.
இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...
* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.
* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.
* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.
* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்.

No comments:

Post a Comment

Partners: Free Articles | Machines | Fake Finder | serial actress | Floral Decorators | Free medical camps | debug | Politics and Elections | Links Directory | Free Software